4 இயக்குனர்கள் இணைந்து இயக்கும் “பாவ கதைகள்” டீசர்.!
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஆந்தலாஜி படமான பாவ கதைகள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல இயக்குனர்கள் ஓடிடி தளத்திற்காக ஆந்தலாஜி படங்களை இயக்கி வந்தனர் .அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற பெயரில் ஒரு அந்தலாஜி வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் தளத்திக்ற்காக இயக்கி வந்தனர் .
இந்த ஆந்தலாஜி படத்தில் சாந்தனு, கௌதம் மேனன், அஞ்சலி, சாய் பல்லவி, சிம்ரன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.தற்போது இந்த ஆந்தலாஜி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Presenting the teaser of Paava Kadhaigal @NetflixIndia #PaavaKadhaigal pic.twitter.com/LybgkPqvhv
— Anjali (@yoursanjali) November 27, 2020