சிபிஎஸ்இ தேர்வுகள் : அடுத்த ஆண்டு தேர்வுகளை எவ்வாறு, எப்போது நடத்துவது?
அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களை பெற பிரச்சாரம் நடத்தப்படும்.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை 2021 ஆம் ஆண்டில், வளர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில், எப்படி, எப்போது நடத்துவது என கருத்துக்களை பெற ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொகரியல் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கருத்துக்களை பெற கல்வி அமைச்சகத்தினால் ஒரு பிரச்சாரம் தொடங்கப்படும் என்று நிஷாங்க் உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்கு பின், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிபிஎஸ்சி வரவிருக்கும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கான மாதிரி ஆவணங்கள் மற்றும் திட்டங்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் தயாரிப்பை அதிகரிக்க சிபிஎஸ்சி ஒரு புதிய வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் பத்தாம் வகுப்பு வாரிய தேர்வுக்கான மதிப்பீடு திட்டத்தை வெளியிட்டுள்ளது. போர்டு தேர்வுகளுக்குத் தயார்பவர்கள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbseacademic.in ஐப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.