யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் – பிரேமலதா

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது.ஜனவரி மாதம் தேமுதி-கவின் பொதுக்குழு, செயற்குழு நடந்த பிறகு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறுகையில்,தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த பயமும் இல்லை என்று கூறினார்.மேலும் தனித்து நின்று தேர்தலை சந்தித்து உள்ளோம். அரசியலில் நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும்.தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணிஅமையும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025