கார் சூடாக இருந்ததால் நீச்சல் அடிக்க சென்று விட்டது…!!காரை காயவைக்க அரிசிக்குள் வைக்க வேண்டுமா..??
அமெரிக்காவில் தனது காரில் ஹேண்ட் பிரேக் போடாததால் கார் தானாக நகர்ந்து நீச்சல் குளத்திற்குள் சென்றது. இந்த போட்டோ தற்போது பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒகலூசா என்ற பகுதி போலீசாரின் அதிகாரபூர்வ பக்கத்தில் கடந்த மார்ச் 28ம் தேதி நீல நிற செடான் கார் ஒன்று நீச்சல் குளத்திற்குள் இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியானது. இது இணையதளத்தில் வைராக பரவியது.
அதற்கு அவர்கள் அளித்த விளக்கத்தில் ஒகலூசா பகுதில் உள்ள ஒரு குடும்பத்தினர் வெளியில் செல்வதற்காக காரை எடுத்துள்ளனர். காரை அந்த வீட்டில் உள்ள பெண் ஒருவர் ஓட்டியுள்ளார். காரில் அவரது கணவரும், குழந்தையும் இருந்துள்ளனர். கார் எடுத்ததும் தான் அப்பார்ட்மெண்ட்டிலேயே பணத்தை மறந்து வைத்துவிட்டதை உணர்ந்த அந்த பெண் காரின் ஹேண்ட் பிரேக்கை போட மறந்து ஆப்பார்ட்மெண்ட்டை நோக்கி ஓடி விட்டார்.
இதனால் கார் அங்கிருந்து தானாக நகர்ந்து அருகில் இருந்த நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தது. அதிஷ்ட வசமாக காருக்குள் இருந்த அந்த பெண்ணின் கணவரும், குழந்தையும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த விபத்தின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியானதும். அது வைரலாக பரவியது. சுமார் 2000 ஷேர்கள், 1500 ரியாக்ஷன்கள் என ஆட்டோமொபைல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பேஸ்புக்கில் பலர் ” கார் சூடாக இருந்ததால் நீச்சல் அடிக்க சென்று விட்டது” என கிண்டல்களை தெறிக்கவிட்டனர்.
செல்போன்கள் தண்ணீரில் முழ்கினால் அரிசிக்குள் வைத்து காய வைப்பது போல் காரையும் அரிசிக்குள் வைக்க வேண்டும் எனவும் கிண்டல்கள் பரவியது. சமீபத்தில் கேராளாவில் வேகன் ஆர் கார் ஒன்று இதே போன்று ஹேண்ட் பிரேக் பிடிக்காததால் நடுரோட்டில் சென்று அதிஷ்டவசமாக விபத்து ஏற்படுத்தால் இருந்தது.