கால் சென்டர் டாஸ்க் வச்சதால பிக் பாஸ் வீடே இரண்டா பிரிஞ்சிருச்சாம்!
கால் சென்டர் டாஸ்க் வச்சதால பிக் பாஸ் வீடே இரண்டா பிரிஞ்சிருச்சு என சனம் ரியோ மற்றும் அர்ச்சனாவிடம் சென்று கூறியுள்ளார்.
இன்றுடன் தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 54 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அவ்வப்போது வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் வந்தாலும் ஒரே வீட்டிற்குள் இருப்பதால் உடனடியாக பேசிக்கொள்கின்றனர். கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் இல்லத்தில் கால் சென்டர் டாஸ்க் நடைபெற்றதுடன், அதனால் பல சண்டைகளும் நடந்தது.
இந்நிலையில், இன்று அர்ச்சனா மற்றும் ரியோ பேசிக்கொண்டிருக்கையில் சனம் அவர்களிடம் சென்று இந்த கால் சென்டர் டாஸ்க் வைத்ததால் சண்டைகள் இருந்தாலும் பேசிக்கொள்பவர்கள் தற்பொழுது முகம் கொடுத்து குட் மார்னிங் கூட சொல்ல மாட்டேன் என்கிறார்கள், அப்படியே இரண்டாக பிரிந்துவிட்டது என சனம் கூற, ஏற்கனவே நிறைய பேசியச்சு என்னால முடியல என ரியோ கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram