இந்திய ராணுவத்துடன் கூட்டணியில் டாடா நிறுவனம்..!!

Default Image
இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக டாடா நிறுவனம் சுமார் 3,192 கார்களை தயாரித்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் கார் முழுவதும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.
ராணுவத்திற்கு என இந்த பச்சை நிறம் பிரத்தியேகமாக இருப்பதால் இந்த நிறத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். இந்த காரின் அனைத்துப்பகுதிகளும் பச்சை நிறமாக மாற்றப்பட்டுள்ளன. காரில் உள்ள பிளாஸ்டிக் பகுதி, மெட்டல் பகுதி, வீல் கவர் பகுதி என் அனைத்தும் பச்சை நிறத்தில் உள்ளது.
இந்த கார் க்ரோம் பினிஷிங் செய்யப்படவில்லை. இந்த காரின் இடது பகுதியில் பின்பக்கம் ஸ்டெப்னி வீலை எடுத்துச் செல்லக்கூடிய கேனிஸ்டர் கேரியர், மற்றொரு காரை டோ செய்து செல்லக்கூடிய பின்டில் ஹூக், காரின் முன் பகுதியில் இன்ஜினுற்கு மேலே ஒரு அன்டனா, பம்பரில் இரண்டு ஸ்பாட் லைட்டுகள் என வெளிபுற தோற்றத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
காரின் உட்புறத்தை பொருத்தவரை பேஜ் கலரில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் காரில் உள்ள அம்சங்கள் குறித்து எந்த தகவலும் தற்போது கிடைக்கவில்லை. டாடா சபாரி ராணுவ காரை பொருத்தவரை 2.2 லிட்டர் 4 சிலிண்டர், டர்போசார்ஜ் டீசல் இன்ஜின் உள்ளது. இது 4,000 ஆர்பிஎம்மில் 154 பிஎச்பி மற்றும் 1700-2700 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனை வெளிப்டுத்தக்கூடியது. இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர் கொண்டது.
இந்த கார் 4*4 டிராஸ்பர் கேஸ் கொண்டது. இதனால் இது குறைந்த மற்றும் அதிக ரேஷியோக்களில் செயல்படும் திறன் கொண்டது. இது வட்ட வடிவிலான ஸிப்ட் ஆன் பிளே சிஸ்டம் பட்டன்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மாருதி ஜிப்ஸியின் இடத்தை டாடா சபாரி கார் நிரப்பும், இது பெரும்பாலும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஆட்களை கொண்டு செல்லவே பயன்பட்டாலும் அவசர காலங்களில் சில ஆப்ரேஷன்களுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், உயரமான சேஸிஸ், 4 வீல் டிரைவ் மெக்கானிஸம், ஆகியவை பல கடினமான பாதைகளிலும் பயணிக்க உதவும். சமீபகாலமாக ராணுவ தளவாட பொருட்களை மாற்றிமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதை அதிகரிக்க கோவை, பெங்களூரு, திருச்சி ஆகிய பகுதிகளை ராணுவ தளவாட உற்பத்தி காரிடாராக மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இனி ராணுவத்தில் அட்டோமொபைல் பிரிவில் அடுத்தடுத்த மாற்றங்களை இந்தியா ராணுவம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்