பிக்பாஸில் நிகழும் நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கஸ்தூரி.!
பிக்பாஸில் நிகழும் நாடகத்தை அப்பட்டமாக தோலுரித்து காட்டியதுடன் தனக்கு சோம் மற்றும் கேபி தான் பிடித்த போட்டியாளர்கள் என்று கஸ்தூரி கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சியை குறித்து பல விமர்சனங்களை நெட்டிசன்களும் , முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களும் கூறி வருகின்றனர்.அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குபவர் கஸ்தூரி.
நடிகையும் , முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கஸ்தூரியிடம் , ரசிகர் ஒருவர் பிக்பாஸில் எலிமினேஷன் என்பது மக்களின் வாக்குகளின் படியா அல்லது விஜய் டிவியின் விருப்ப்படியா, இந்த நிகழ்ச்சியில் கமலஹாசனின் பங்கு என்ன? இந்த சீசனில் டைட்டிலை வெல்வது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் .
அதற்கு கஸ்தூரி வோட்ஸா காமெடி பண்ணாதீங்க என்று கூறி பிக்பாஸில் நிகழும் நாடகத்தை அப்பட்டமாக தோலுரித்து காட்டியுள்ளார்.அதாவது அந்த பதிவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி போட்டியாளராக விஜய் டிவியின் கம்பெனி ஆர்டிஸ்ட்கள் இருவரும் ,வெளியே இருந்து ஒரு இளம் போட்டியாளரும் இடம் பெறுவர் .மேலும் விஜய் டிவி ஏற்கனவே ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரையும் அதிக அளவு புரமோட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாலாஜியை கண்டென்ட்க்காக மட்டும் கடைசி வரைக்கும் வைத்து விட்டு தர்ஷனை போன்று கடைசியில் வெளியே அனுப்பி விடுவார்கள் என்று உண்மையை கூறியுள்ளார்.அதனுடன் தனிப்பட்ட முறையில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் சோம் மற்றும் கேபி என்று குறிப்பிட்டுள்ளார்.பிக்பாஸில் நிகழும் நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் கஸ்தூரி.
Votes aa? Comedy pannaatheenga.
Finalists will be two Vijay TV “combany artists” & one young outsider.
I think Ramya & Rio will be promoted a lot in coming weeks. Bala will be treated as content fodder & eliminated just like Tharshan
My personal favorites Som ???? & Gaby ????. https://t.co/NgqygCumfA— Kasturi Shankar (@KasthuriShankar) November 22, 2020