ஸ்டெர்லைட், காவிரி விவகாரம்:நாளை நடிகர்கள் போராட்டம் …!ரஜினி ,கமல் ,விஜயகாந்த் ,அஜித்,விஜய்க்கு அழைப்பு …!
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரங்களில் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (ஏப்ரல் 8) காலை 9 மணி முதல் 1 மணி வரை அறவழி கண்டன போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு 3,000-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்கள் போராட்டத்தில் பங்கேற்குமாறு நடிகர் சங்கம் தனித்தனியாக குறுஞ்செய்தி, போன் மூலமாகவும் அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது அரசியலில் இறங்கி பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வரும் கமல், ரஜினி இருவரும் இந்த போராட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.