#NivarCyclone : நிவர் புயல் பாதிப்பு! துணை முதல்வர் நேரில் ஆய்வு!
நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து, துணை முதல்வர் ஓபிஎஸ், சென்னை வேளச்சேரியில் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்று அரசியல் பிரபலங்கள் பார்வையிட்டு வருகிற நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ், சென்னை வேளச்சேரியில் நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.