#Breaking : நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று நண்பகல் 12 மணி முதல் வழக்கம்போல் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உருவாகிய நிவர் புயல் காரணமாக நேற்று முழுவதும் முழு தமிழகமே பதட்டத்தில் காணப்பட்டது.புயலானது தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ளது.இதற்கு இடையில் , புதுக்கோட்டை , நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 24-ஆம் தேதி மதியம் ஒரு மணி முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக புதுக்கோட்டை , நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.புயல் கரையை கடந்து விட்டதால் பேருந்து சேவை மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு #NivarCycloneUpdates | #Nivar_cyclone pic.twitter.com/LJUDwuQwod
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) November 26, 2020