#BreakingNews : புயல் பாதித்த தமிழகம் ,புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவும் – அமித் ஷா உறுதி

Default Image

நிவர் புயல் பாதிப்பு குறித்து  தமிழக முதலமைச்சர்  பழனிசாமி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார் .

வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயலானது, கரையை கடந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.இதனை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிவர் புயல் பாதிப்பு குறித்து  தமிழக முதலமைச்சர்  பழனிசாமி ,புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம்  கேட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம்    உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அமித் ஷா.மேலும் நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரியை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்