கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல்.. முழுமையாக கரையை கடக்க 3 மணிவரை ஆகும்!
15 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல், முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3 மணிக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது 15 கிமீ வேகத்தில் சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தூரத்தில் புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கிமீ முதல் 140 கிமீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் புகுந்த காரணத்தினால், முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், மழையில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். தற்பொழுது இந்த புயலின் முன்பகுதி, மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு வருகிறது. இந்தநிலையில், இந்த புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3 மணிக்கு மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.