செம்பரம்பாக்கம் ஏரி.. நீர்திறப்பு 7000 கன அடியாக அதிகரிப்பு!

Default Image

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 3000 கன அடியாக இருந்த நிலையில், தற்பொழுது 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக உருமாறி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது. இந்த புயல் தற்பொழுது 14 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், கடலூரில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென் கிழக்கு தென் கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், செம்பரபாக்கம் ஏரியின் நீர் திறப்பு முதலில் 1,500 கனஅடியாக இருந்த நிலையில், பின்னர் 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்