#BreakingNews : மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் – நிர்வாகம் அறிவிப்பு
இன்று இரவு 8 மணியுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று இரவு 8 மணியுடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூழலை பொறுத்து நாளை ரயில் இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
In connection with Niver Cyclone, the last Metro Train Services Today (25.11.2020) from all terminals will depart at 07.00 pm. So as to end the train operations at 08.00 pm.
Train service will resume tomorrow depending on the weather conditions.
— Chennai Metro Rail (@cmrlofficial) November 25, 2020