செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்.! தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்.!

Default Image

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

நிவர் புயலானது 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் , அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.அவ்வாறு சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 22 இன் அடி எட்டியதை தொடர்ந்து இன்று மதியம் 12 மணியளவில் 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது .

எனவே அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் சென்னை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ள 169 நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது . சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியின் ஷட்டர்கள் திறக்கப்பட்டதால் ,அதனை காண மக்கள் அலை மோதினர் .ஆனால் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கிருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர்.ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

அதே போன்று அடையாறு ஆற்றின் வெள்ளமானது கோட்டூர்புரம்,சிறுகலத்தூர் , குன்றத்தூர் ஆகிய பகுதிகளை கடைந்து தான் கடலுக்குள் கலக்குகிறது.எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர் .அதே போன்று இந்த உபரிநீர் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் மாம்பலம், வேளச்சேரியில் உள்ள கேனல்களையும் சுத்தம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் நிவாரண முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைவருக்கும் முகமூடிகள் ,சானிடைசர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாவும் ,ஒரு நபருக்கு 27 பொருட்களின் பட்டியல் என்ற வீதம் தயார் நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா கூறியுள்ளார்.தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடும் உபரி நீரின் அளவு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்