மரங்களை நடுங்கள் , “கண்டிப்பாக தம்பி” – கமெண்ட் செய்தவருக்கு பதிலளித்த முதல்வர்
புயலால் ஏற்பட்டுள்ள மரசேதங்கள் குறித்து முதல்வர் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில், எல்லாம் முடிந்ததும் மரங்களை நடுங்கள் என கூறியவருக்கு பதிலளித்துள்ளார் முதல்வர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் எனும் புயல் உருவாக்கிக்கொண்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் அருகில் நெருங்க நெருங்க பல இடங்களில் காற்று மிக அதிகளவில் வீசிக்கொண்டு இருக்கிறது இதனால் மரங்கள் வீடுகள் அனைத்தும் உடைந்து விழுந்துகொண்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் முறிந்து மற்றும் உடைந்து விழக்கூடிய மரங்களை அறுப்பதற்காக சென்னையில் 6 மரம் அறுக்கும் இயந்திரங்கள் வடக்கு மற்றும் தெற்கு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் கமெண்ட் செய்த ஒருவர் “எல்லாம் முடிந்ததும் மீண்டும் மரங்களை நாடுங்கள் என கூறியுள்ளார் “. அதற்க்கு முதல்வர் “கண்டிப்பாக தம்பி” என பதிலளித்துள்ளார். இதோ அந்த பதிவு,
புயலால் விழும் மரங்களை அப்புறப்படுத்த, சென்னை மத்திய பகுதி- 3, வடக்கு – 2, தெற்கு – 1 என மொத்தம் 6 மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. #NivarCyclone #Nivarpuyal #TNGovt pic.twitter.com/6ILsG7fTw3
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 25, 2020
கண்டிப்பாக தம்பி! https://t.co/uTouFxarWy
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 25, 2020