1000 கனஅடி திறப்பு: முதலமைச்சர் கொட்டும் மழையில் ஆய்வு.!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கபட்ட நிலையில் முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து கொண்டு வருகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏரியில் உள்ள 7 மதகுகளில் முதற்கட்டமாக வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பையடுத்து கொட்டும் மழையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.