#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி திறப்பு.!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது.
தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியே நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 1000 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது, பின் சூழ்நிலையை பொறுத்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது திறக்கப்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் திறக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.