செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்- மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம்.!

Default Image

கனமழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில் உள்ள செம்பரப்பாக்கம் ஏரியானது வேகமாக நிரம்பி வருகிறது .எனவே சென்னை மாநகராட்சி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று 12 மணியளவில் 1000 கன அடி அளவிற்கு உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாகவும் ,மேலும் நீர்வரத்திற்கு ஏற்ப படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் பொதுப் பணித்துறை அறிவித்துள்ளது .

எனவே சென்னை மாநகராட்சி அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் குறிப்பாக மண்டலம் 10,11, 12 மற்றும் 13-ல் வசிப்பவர்கள் சென்னையில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து பல இடங்களில் பெய்து வரும் கனமழையால் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.எனவே ஏரிகளை தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் கூறியதாவது, தொடர் கனமழையால் நிரம்பி வரும் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த 25 அடியில் இன்று 22 அடி நிரம்பியுள்ளது.அதே போன்று பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி .அதில் நேற்றைய நீர் இருப்பு 1,786மில்லியன் கன அடியாகும் .எனவே இவை இரண்டும் நிரம்பும் அபாயம் உள்ளதால் சிறப்பு கவனம் செலுத்துமாறு மத்திய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவித்தியுள்ளது.

Sembarambakkam and Boondi lakes

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்