வருகிற 26 ஆம் தேதி தருண் கோகாய் உடல் நவக்கிரக மைதானத்தில் தகனம் செய்யப்படும் – மாநில அமைச்சர்!
வருகிற 26 ஆம் தேதி உயிரிழந்த தருண் கோகாய் அவர்களின் உடல் நவக்கிரக மைதானத்தில் தகனம் செய்யப்படும் என அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமாகிய தரும் கோகாய் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் வீடு திரும்பினார். இருப்பினும் கடந்த 1 ஆம் தேதி மீண்டும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.
நீண்ட காலம் அசாம் முதல்வராக பணியாற்றய தருண் அவர்களின் மறைவுக்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 26 ஆம் தேதி நவகிரக தகன மைதானத்தில் வைத்து தருண் கோகாய் அவர்களின் உடல் தகனம் செய்யப்படும் என அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மூன்று நாள் அசாமில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.