பாலஸ்தீனமும்,இஸ்ரேலும் சொந்தம் கொண்டாடும் காசா பகுதியில் பெரும் பதற்றம்….!
பாலஸ்தீனமும் ,இஸ்ரேலும் சொந்தம் கொண்டாடும் தன்னாட்சி பெற்ற காசா பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துருப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காசாவின் தெற்கு பகுதியில், கடந்த 30ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, பாலஸ்தீன போராட்டக்காரர்கள் திடீரென டயர்களை எரித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதைத் தடுக்க இஸ்ரேல் துருப்புகள் முயன்றபோது, பரஸ்பரம் மோதல் வெடித்தது. ஒருகட்டத்தில் இஸ்ரேல் துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், இரண்டு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இதனால், காசா தன்னாட்சி பகுதி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.