ஐபிஎல் துவக்கவிழாவில் நடனம் ஆட இவ்ளோ சம்பளமா?கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை விட அதிகமாக கேட்கும் தமன்னா…!
நடிகை தமன்னாவிற்கு மும்பையில் நாளை துவங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் துவக்கவிழாவில் நடனமாட ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் உள்ளூர் வீரர்களின் திறமையை வளர்க்கும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியின் துவக்க விழாவில் எப்பொழுதும் திரையுலக நட்சத்திரங்கள் வந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவர்.
இதற்காக அவர்களுக்கு பெரிய தொகை ஒன்று அளிக்கப்படும்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான 11-வது ஐபிஎல் தொடர் நாளை மும்பையில் துவங்க உள்ளது. இதன் துவக்க விழாவில், ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளனர்.
இதில், நடிகை தமன்னாவிற்கு 10 நிமிடம் நடனம் ஆடுவதற்காக ரூ.50 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2 மாதங்கள் விளையாட உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கே 20 லட்சம் சம்பளம் பேசப்பட்டிருக்கும் நிலையில் தமன்னா வாங்கும் சம்பளத்தை கேட்டு பலரும் புலம்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.