லக்னோ பல்கலைக்கழகத்தின் 100-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி.!
லக்னோ பல்கலைக்கழகம் இன்று 100-வது ஆண்டு விழாவை கொண்டாடகிறது .இந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
கடந்த 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்ட லக்னோ பல்கலைக்கழகம் இன்று 100-வது ஆண்டை கொண்டாடுகிறது .இந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் மாலை 5.30 மணிக்கு கலந்து கொள்ளவுள்ளார் .
மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழகத்திற்கான சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரை மற்றும் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் அலோக் குமார் ராய் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் .லக்னோ பல்கலைக்கழகம் கடைசியாக 2002-ம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது 18 வருட இடைவெளிக்கு பிறகு லக்னோ பல்கலைக்கழகம் 100-வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
மேலும் உத்திரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 19-ம் தேதி நடைந்த விழாவானது கடுமையான கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது