வயர்லெஸ் ஏர்பாட்ஸ் தொலைந்துவிட்டதா? கண்டுபிடிக்க இதோ எளிய வழி..!
ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் ஏர்பாட்ஸ் பயன்படுத்துபவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அழைப்பு விடுபடுதல், ஆடியோ குறைகள் ஆகியவைகளை கூறலாம். நீங்களும் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்திருந்தால் தீர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்
இது நிச்சயமாக ஏர்பாட்ஸ் பயனர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் அளவை வைத்து கணக்கிடும்போது இவற்றில் ஏதேனும் ஒன்றை தொலைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் உங்கள் ஐபோனில் உள்ள ஃபைண்ட் மை போன் மூலம் இதனை கண்டுபிடிக்க முடியும்.
இந்த வசதியை நீங்கள் பெற உங்கள் போனில் முதலில் ‘பைண்ட் மை ஐபோன்’ செயலியை நீங்க்ள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு உங்களுக்கு ஆப்பிள் ஐடி தேவை என்பதும் பின்னர் இதனை ஐகிலோடு மூலம் டவுன்லோடு செய்யலாம்.
இன்ஸ்டால் செய்த பின்னர் மைபோன் செட்டிங் சென்று அதில் உள்ள ஏர்பாட்ஸ் செலக்ட் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு மேப் தெரியும். அதில் ஏர்பாட்ஸ் கடைசியாக பயன்படுத்தப்பட்ட இடமும் ஒரு பச்சை டாட் மூலம் தெரிய வரும். ஒருவேளை அது டர்ன் ஆப் ஆகியிருந்தால் மேப்பில் அது எங்கே இருக்கலாம் என்ற ஐடியா கிடைக்கும்