அமிதாப் காதலியால் வாழ்த்து பெற்ற ஐஸ் நடிகை …!
சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆனதால் நடிகை ஐஸ்வர்யாராய் அவரை சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் பலரும் வாழ்த்துகிறார்கள்.
முன்னாள் கதாநாயகி ரேகாவும் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
இவருக்கும் அமிதாப்பச்சனுக்கும் காதல் ஏற்பட்டு கடைசியில் பிரிந்து விட்டதாக அந்த காலத்தில் கிசு கிசுக்கள் வெளியானது.
இதனால் அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனுக்கும் ரேகாவுக்கும் மனதுக்குள் தீராத பகை உள்ளது என்றும் பொதுமேடையில் சந்தித்துக்கொண்டாலும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு ரேகா கடிதம் எழுதி வாழ்த்தியது இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த கடிதத்தில் ரேகா கூறியிருப்பதாவது:-
“நீ பெருக்கெடுத்து செல்லும் நதிபோல் எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டு இருக்கிறாய். நதி எங்கெல்லாம் சுற்றினாலும் அது சேர வேண்டிய இடத்தை சரியாக சென்று அடையும். நீயும் அப்படித்தான். நீ சொன்னதை மக்கள் மறக்கலாம்.
நீ என்ன செய்தாய் என்பதையும் மக்கள் மறக்கலாம். ஆனால் படங்கள் மூலம் நீ என்ன மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தினாய் என்பதை யாராலும் மறக்க முடியாது.
சாதிப்பதற்கு தைரியம் வேண்டும். அது உன்னிடம் இருக்கிறது. சினிமாவில் உனது சாதனைகள் அழகானவை. உன்மீது பார்வை நிற்கிற மாதிரி சாதித்து விட்டாய். வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் ஏற்பட்ட போதும் பீனிக்ஸ் பறவையாய் மேலே பறந்து சென்றாய். உன் வளர்ச்சியை பார்த்து பெருமைப்படுகிறேன்.
நிறைய கதாபாத்திரங்களில் நடித்து விட்டாய். ஆனாலும் எனக்கு பிடித்த கதாபாத்திரம் ஆரத்யாவுக்கு தாயாகி இருப்பது. 20 ஆண்டுகள் சினிமாவில் இருக்கும் உனக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள் என்று ரேகா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.