நிவர் புயல் எதிரொலி: இன்று சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து.!
நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதனை நேற்று தெற்கு ரயில்வே அறிவித்தது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், நிவர் புயல் காரணமாக இன்று காலை 10 மணி முதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நிலைமையை பொறுத்து நாளை விடுமுறை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது, தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, புதுச்சேரியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் கரையை நெருங்க நெருங்க அதன் பாதை வடமேற்கு நோக்கி மாறலாம் என சொல்லப்படுகிறது.