பிரதமர் நரேந்திர மோடியிடம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மிரட்டுவதாக பாஜக எம்.பி. புகார் …!
பிரதமரிடம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.ஒருவரே புகாரளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தலித்களின் போராட்டத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தலித் பிரிவைச் சேர்ந்த ரோபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான சோட்டே லால், முதலமைச்சர் ஆதித்யநாத்தை சந்திக்க இருமுறை சென்றதாகவும், ஆனால், அவர் தம்மைத் திட்டி வெளியே அனுப்பி விட்டதாகவும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகள், யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் மாறவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமது புகார் குறித்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்திருப்பதாகவும் சோட்டே லால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.