திமுக காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக போராடுகிறது…!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவிரி விவகாரத்தில், வெறும் அரசியல் லாபத்திற்காகவே, திமுக, போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.
சென்னையை அடுத்த கிளம்பாக்கத்தில், 321 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புறநகர் பேருந்து நிலையம் அமையவிருக்கிறது. இங்கு வியாழக்கிழமை மாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்டுமான பணிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது தங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை எல்லாம் தவறவிட்ட திமுக, தற்போது, வெறும் அரசியல் லாபத்திற்காக, போராட்டங்களை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.