IPL 2018:நான் எப்பம் இறங்குவேன்,எப்டி இறங்குவேன்னு தெரியாது ..!கண்டிப்பா நான் இறங்குறது சிஎஸ்கேக்கு சர்ப்பரைஸா இருக்கும்!

Default Image

வரும் 7-ம் தேதி தொடங்கி மே 27-ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 11-வது சீசன் நடைபெறவுள்ளது.

புதிய சரவெடி பேட்ஸ்மென்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் எந்த டவுனில் களமிறங்குவேன் என்பதை ரகசியமாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

7ம் தேதி ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வான்கடேயில் மோதுகின்றன.

“பேட்டிங்கில் எந்த டவுன் ஆர்டரில் இறங்குவேன் என்பதை சர்ப்ரைஸாக வைத்திருக்க விரும்புகிறேன். எங்கள் நடுவரிசை வலுவாக உள்ளது, எவின் லூயிஸ், இஷான் கிஷன் மூலம் நல்ல தொடக்க வீரர்களும் உள்ளனர். 7ம் தேதி பார்ப்போம் நான் எந்த டவுன் ஆர்டரில் இறங்குகிறேன் என்பதை அதுவரை அது சர்ப்ரைசாக இருக்கட்டும்.

எந்த மாதிரியான வீரர்களைக் கொண்டிருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே நல்ல அணி. மும்பை இந்தியன்ஸுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் எங்களைப் பாதிக்காது. ஒரு அணியாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இதைத்தான் செய்தோம்.

மகேலா சொன்னது போல் நாங்கள்தான் கோப்பையை வெல்ல சாதகமான அணி என்ற நிலையில் செல்ல வேண்டியதில்லை. மற்ற அணிகளுடன் சம அளவில் உள்ள அனி என்றே தொடருக்குள் நுழைய விரும்புகிறோம். தொடரை வெல்ல என்ன வேண்டுமோ அது எங்களிடம் இருக்கிறது.

நன்றாக தயாரித்திருக்கிறோம், முதல் போட்டிக்குத் தயார். அனைத்து அடிப்படைகளையும் சரிவர வைத்துள்ளோம். இனி களத்தில் இறங்கி ஆட வேண்டியதுதான்.

கடந்த ஐபிஎல் சாம்பியன் என்ற அடையாளம் அழுத்தம் ஏற்படுத்துவதாக நான் பார்க்க மாட்டேன், மாறாக அது பொறுப்புடைமை. ஆம் நாங்கள் கடந்த ஐபிஎல் சாம்பியன் அதை நினைத்து பெருமைப் படுகிறோம். இப்போது சரியான அணிச்சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துவதுதான் எங்கள் அணுகுமுறை.மகேலா ஜெயவர்தனே பும்ரா குறித்து அறுதியிட்டது சரியே. அவர் தரமான பவுலர், அவர் எங்களுக்காக அருமையாக ஆடி வருகிறார். பும்ராவுக்கு அழுத்தம் கிடையாது, எந்த சூழலாக இருந்தாலும் அவர் செய்ய வேண்டியதை சிறப்பாகவே செய்கிறார்.

கடந்த ஆண்டு மலிங்கா பார்மில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு பொறுப்பைச் சுமந்தார். கடந்த ஆண்டு மலிங்கா இல்லாததால் மிட்செல் ஜான்சன், மெக்லினாகன் ஆகியோரை மாற்றி மாற்றி பயன்படுத்தினோம்.

இந்த ஆண்டு பும்ரா மீது அதிக அழுத்தம் இருக்காது.இவ்வாறு கூறினார்  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்