ஸ்ரீ லீக்ஸ் மீது ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு …!
ஹைதராபாத் குற்றப்பிரிவு போலீஸார் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் ரகசியங்களை வெளியிடுவதாக கூறிய நடிகை ஸ்ரீரெட்டி மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டிசில தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவருக்கு எந்த சினிமா வாய்ப்புகளும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீரெட்டி, சில தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சினிமா வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்கள் என தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக தெரிவித்தார்.மேலும், தெலுங்கு பேசும் நடிகைகளை உல்லாசத்துக்கு மட்டுமே உபயோகித்துவிட்டு சில இயக்குநர்கள் ஒதுக்கிவிடுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இதுபோன்று பல பெண்களை ஏமாற்றிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ரகசிய வீடியோக்கள், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இது, தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நடிகை ஸ்ரீரெட்டி மீது பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், ஹைதராபாத் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அதில், தெலுங்கு திரையுலகினர் மீது களங்கம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதன்பேரில், நடிகை ஸ்ரீரெட்டி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.