நாடாளுமன்றம் தொடர்ந்து 21-வது நாளாக முடங்கியது …!
நாடாளுமன்றம் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்களின் அமளியால் தொடர்ந்து 21வது நாளாக முடங்கியது.
காலையில் மக்களவை தொடங்கியதும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்த முழக்கமிட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே போன்று மாநிலங்களவையில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் வெங்கையாநாயுடு அமைதி ஏற்படுத்த முயன்றும் பலனளிக்காததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.