வங்கிகளுக்கு எச்சரிக்கை …!எஸ்.எம்.எஸ்.களுக்கு பயன்பாட்டுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் …!
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்கு பயன்பாட்டுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரிவர்த்தனைகள் தொடர்பாக வங்கிகள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதனை பல வங்கிகள் முறையாகக் கடைபிடித்தாலும், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் ரிசர்வ் வங்கி விதிகளை மீறி செயல்படுவதாக வங்கி விதிகள் மற்றும் தர வாரியமான பி.சி.எஸ்.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
அந்தந்த வாடிக்கையாளருக்கு அவரவர் பயன்பாட்டுக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள பி.சி.எஸ்.பி.ஐ., இந்த வங்கிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிப்பதாகவும், அதனால் சாதாரண வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.