சினிமாவில் படுக்கைக்கு அனுப்பும் விவகாரம் …!அந்த விஷயத்தில் இயக்குனருக்கு சவால் விடும் ஆபாச லீக் நடிகை ….!
பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவதுடன் படுக்கைக்கும் அழைப்பவர்கள் திரைப்படத்துறையில் இருக்கிறார்கள்.
அவர்களைப்பற்றி ஆதாரப்பூர்வமாக வெளியிடுவேன் என்று டோலிவுட் நடிகை ஸ்ரீரெட்டி தனது இணையதள பக்கத்தில் புகார் கூறியிருந்தார். ஆனால் யாருடைய பெயரையும் அதில் குறிப்பிடவில்லை.
இந்நிலையில் டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலாவை பற்றித்தான் ஸ்ரீரெட்டி குறிப்பிடுகிறார் என இணைய தளத்தில் தகவல் பரவியது.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர் கம்முலா,’நடிகைக்கு எச்சரிக்கை விடுத்தார். தன்னை குறிப்பிடுவதுபோல் எழுதியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என எச்சரித்திருந்தார்.
அத்துடன் பிரச்னை ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது ஸ்ரீரெட்டி நேரடியாகவே சேகர் கம்முலா பெயரை குறிப்பிட்டு சவால் விட்டு மெசேஜ் போட்டிருக்கிறார்.
அதில்,’சட்டப்படி எதையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் பண பலத்துக்கு நான் தலைவணங்க மாட்டேன். என்னிடம் நான் சொன்னதற்கான எல்லா வகையான ஆதாரங்களும் இருக்கிறது. அதை சட்டப்படி சரியான நேரத்தில் சமர்பிப்பேன்’ என குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. இதனால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.