வெறும் 102 போட்டிகளை ரூ 6,138 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஸ்டார் நிறுவனம்…!உலக அளவில் இது அதிகபட்ச தொகையாகும்…!
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.ரூ 6,138 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஸ்டார் நிறுவனம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.2018-2023 வரைக்குமான ஒப்பந்தமாகும் இது.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பணமழை உரிமைகளை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது, ஒன்று ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமை, இதனை கடந்த செப்டம்பர் 2017-ல் ரூ.16,347 கோடிக்கு தட்டிச் சென்றது. ஐபிஎல் ஒப்பந்தம் 2018-22 வரை உள்ளது.
இதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் உரிமைகளை 2012-18 என்ற ஆறாண்டுகளுக்கு ஸ்டார் இந்தியா பெற்ற போது ரூ.3851 கோடி கொடுத்து ஒப்பந்தம் பெற்றது, இப்போது 59% கூடுதலாக அளித்துள்ளது.
தற்போது பெற்றுள்ள இந்திய கிரிகெட் உரிமைகளின் படி போட்டி ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.60 கோடியாகும். ஐபிஎல் போட்டிகளில் ஒரு போட்டிக்கான ஒளிபரப்பு உள்ளிட்ட உரிமைக்கான செலவுகள் ரூ.54.5 கோடியாகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்டார் இந்தியா ஆடவர் இந்திய கிரிக்கெட்டின் 102 போட்டிகளை ஓளிபரப்புகிறது. மேலும் இந்திய உள்நாட்டுப் போட்டிகளுக்கான உரிமைகள் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான உரிமைகளும் அடங்கும்.
முதன் முறையாக இதற்கான ஏலம் இ-ஆக்ஷனாக நடத்தப்பட்டது, விளையாட்டில் இத்தகைய இ-ஆக்ஷன் இதுவே முதல் முறையாகும். இந்த இ-ஆக்ஷனில் ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க், ரிலையன்ஸ் போன்ற ஜாம்பவான்கள் போட்டியில் இறங்கினர். இதில் ஸ்டார் இந்தியா மீண்டும் ஒப்பந்தங்களை வென்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.