வாரஹி வழிபட்டால் வளமாகும் வாழ்க்கை…!

Default Image

ஏற்றம் வரம் தரும் வாரஹி  வழிபாடு….!

வராஹி மனித உடலும், வராஹி(பன்றி) முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , அடைக்கலாம் அளிப்பதிலே மாரிக்கு நிகரானவள். இவள் லலிதை தேவியின் படைத்தலைவி இருப்பவள், சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர(காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்

சிவனின் அம்சமாக விளங்கும் வாரஹி…!

தமிழர்களின் பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராஹி உபாசனை! பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படுவது பன்றியின் அம்சமாகும் விஷ்ணுவின் அவதாரங்களில் இதுவும் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

எதிர்களை எதிர்க்கும் வாரஹி…!

பைரவரின் சக்தியாக இருப்பதால்,வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லையை அகற்றுவது மட்டுமல்லாமல் வாரஹியை வணங்கி செய்யும் செயலுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் ,அம்பிகையின் அவதாரமாக பிறந்ததால், சிவன்,விஷ்ணு,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவள்.

எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகசக்தியும்,தேவகுணமும் கொண்ட வாரஹி பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். உலகை அழிவில் இருந்து மீட்டவளாகக் கருதப்படுகிறாள்

பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு வருபவள் வாரஹி வழிபாட்டால் வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் , எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராகியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்.எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.


இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாவதாக இருப்பவர். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. சிவாலயங்களில் கன்னி மூலையில் இவர்களை காணலாம் ..

ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில்

களிக்கும் இச் சிந்தையில் காரணமாம் காட்டித்

தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்

அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே ! ”

– திருமூலர்

உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற அம்பிகை நம் மனதில் எழுந்தருளினால், உண்மைப் பொருள் விளங்கும் ; மனம் தெளிவு பெறும் . அவளை அறிந்து கொள்பவருக்கு அனைத்துச் செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார். அருள்மிகு முத்தவடுகநாத சித்தர், அம்பிகையின் மறுவடிவமான வராஹி அம்மனிடம் சரணடைந்து சித்தி பெற்றார். அதுவும் தமது ஐந்தாம் வயதில்.

அபிராமி அந்தாதி…!

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’  என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

அன்னை வராஹி வழிபாடு…!

தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அன்னை வராகியை நமது வீட்டில் இருக்கும் பூஜையறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம்;பூஜையறை இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கலாம்

அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..வேறு திசைகளில் ஏற்றினால் ஜபத்துக்குரிய பலன் நம்மை வந்து சேராது. ஸ்ரீ மகாவராஹியை ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும்.

ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி.
வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.

தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.

பூஜை முறைகள்…!

வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதன் பலன் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்

ஸ்ரீ வாராஹி அம்மன் துதி

ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

மேலும் தகவலுக்கு  தினசுவடுடன்  இணைந்திடுங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்