2,000 கோடி ரூபாய் மோசடி…!பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் மோசடி…!தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது…!
தொழிலதிபர் அமித் பரத்வாஜ், ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என ஆசைகாட்டி, பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிய அவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் வைத்து, புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட அமித்பரத்வாஜ், நாட்டிலேயே முதல் முறையாக பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் வகையில் 2014ஆம் ஆண்டில் இணைய சில்லறை வணிகத்தை தொடங்கியவர். ஹாங்காங்கில் இருந்தும் பிட்காயின் தொழிலில் ஈடுபட்ட அமித் பரத்வாஜ், பின்னர் பிட்காயின் முதலீட்டில் மல்ட்டி-லெவல் மார்க்கெட்டிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். கெயின் பிட்காயின் என்ற பெயரில், பிட்காயினில் முதலீடு செய்தால் ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என அறிவித்ததால், அவரது பேச்சை நம்பி மும்பை, புனே, நாண்டேட் ((Nanded)), கோலாப்பூர் ((Kolhapur)) உள்ளிட்ட மகாராஷ்டிரத்தின் பல நகரங்களை சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
சுமார் 8 ஆயிரம் பேர், 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், அறிவித்தபடி 18 மாத ஒப்பந்தம் முடிந்த பிறகும் பணம் முதலீட்டாளர்களுக்கு திரும்பவரவில்லை. இதையடுத்து புனே உள்ளிட்ட 3 நகரங்களில் அமித் பரத்வாஜ் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.
ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் வைத்து அமித்பரத்வாஜை புனே போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே அவரது கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.