தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் கிடையாது ..!போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்….!மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம்…!
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்.மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் என்று தெரிவித்தார்.
வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தமிழிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் என்எல்சி மட்டுமல்ல என்எல்சி அதிகாரிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை நடத்த விடமாட்டோம் என்று கூறினார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் விளையாட்டை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் தமிழகத்தின் உரிமையை பெற தொடர்ந்து போராடி வருகிறோம், காங்கிரஸ் – பாஜக எங்கள் இனத்துக்கு எதிரானவர்கள் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி உள்ளோம்.மீறி கிரிக்கெட் நடந்தால் மைதானத்தில் நாங்கள் யார் என காட்டுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.