பாகிஸ்தானில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் பள்ளிகள் மூடல்.!
பாகிஸ்தானில் கொரோனா விதிமுறைகளை மீறியதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டள்ளது.
பாகிஸ்தானின் கல்வி அமைச்சர் ஷப்கத் மஹ்மூத் இன்று அரசு வழங்கிய கொரோனா விதிமுறைகளை மீறியதால் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் ஆனால், அவை பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறினார். இதனால், குழந்தைகளின் ஆரோக்கியத்தை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது. நாடு முழுவதும் சுமார் 50 மில்லியன் மாணவர்கள் உள்ளனர். அதாவது, நம் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு எனவே பள்ளிகளை மூடுவது அவசியம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளை பின்பற்ற முடியாதவர்கள் வீட்டுப்பாடங்களை வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் கூறினார். அதே நேரத்தில், வீட்டுப்பாடத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்றால் மாணவர்கள் அல்லது பெற்றோர்களை வாரத்திற்கு ஒரு முறை அழைக்கலாம். இதற்காக, டிசம்பர் 24 வரை பள்ளிகள் திறந்திருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.