காஞ்சிபுரத்தில் திமுக தொண்டர்கள் போலீஸாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றதால் கைது …!
காஞ்சிபுரம் தேரடி காந்தி சாலையிலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழலரசன் தலைமையில் எதிர்கட்சிகளை சேர்ந்த திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் போலீஸாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றதால் கைது செய்யப்படனர்.
இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.
காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது.
அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மறியல் செய்து வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் தேரடி காந்தி சாலையிலிருந்து திமுக எம்.எல்.ஏக்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழலரசன் தலைமையில் எதிர்கட்சிகளை சேர்ந்த திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் போலீஸாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றதால் கைது செய்யப்படனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.