நிவர் புயல் – முதல்வர் ஆலோசனை..!
புதிதாக உருவாகியுள்ள “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இன்று கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும், நாளை மாலை பாண்டிச்சேரி அருகே “நிவர்” புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.