சவுகார்பேட்டை துப்பாக்கிசூடு.. தலில் சந்த் உறவினர் தற்கொலை..!
சென்னை சவுகார்பேட்டையில் மூன்று பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயமாலா கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயமாலா நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்தார். அதில், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து தனது சகோதரரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.
அந்த ஆத்திரத்தில் தான் இந்த கொலை சம்பவத்தை நடத்தியதாக ஜெயமாலா கூறினார். எனவே இந்த பாலியல் தொல்லை தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக தலில் சகோதர மகனான விஜயகுமாரை ஆர்.கே நகர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் விஜயகுமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், இன்று காலை விஜயகுமார் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு வீடியோ ஒன்று வெளியிட்ட தனது உறவினருக்கு வாட்சப் மூலம் அனுப்பியுள்ளார். அதில் காவல்துறை தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஜெயமாலா தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாக்குமூலத்தில் விஜயகுமாரின் பெயரும் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், முதற்கட்ட விசாரணைக்காக தான் விஜயகுமாரை அழைத்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலில் சந்த், ஜெயமாலா மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.