#BreakingNews : பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை – ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை நேரில் சந்தித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு அந்த அரசாணையை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்பொழுது வரை ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் வருகின்றார்.இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ் பவனில் சந்தித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் சந்தித்துள்ளார்.