நிவர் புயல் எதிரொலி:பொது மக்களுக்கு அவசர எண்ணை அறிவித்த புதுக்கோட்டை மாவட்டம்.!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு அவசர எண்ணை அறிவித்துள்ளது.

காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நிவர் புயல் நாளை கரையை கடக்கும் என்றும் ,இதனால் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிவர் புயலை எதிர் கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்திகளை சந்தித்த கலெக்டர் உமா மகேஸ்வரி,நிவர் புயலை எதிர் கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ,நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ , அல்லது 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் பாதிப்பு அதிகம் வரக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான தங்கும் வசதியும் , அவர்கள் பள்ளிகளில் தங்க தயார் நிலையில் வைக்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார் .மேலும் புதுக்கோட்டையில் 60-க்கும் மேற்பட்ட புயல் பாதுகாப்பு மையங்கள் உள்ளதாகவும், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

எனவே புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்

Leave a Comment