குடியரசு தலைவர் சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Default Image

திருப்பதி சுவாமி தரிசனத்திற்காக குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் சென்னை வருகை தந்துள்ளதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 9:45 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்னை வந்துள்ளார். இந்நிலையில், அங்கு சுவாமி தரிசனம் முடிந்தவுடன், திருப்பதியில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டரில், மீண்டும் மாலை 5:35 மணிக்கு சென்னை வருகிறார். இதனையடுத்து அவரை வரவேற்று வழியனுப்பி வைக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாலை 5:45 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

குடியரசுத் தலைவர் திருப்பதி செல்லும் வழியில் சென்னை வருகிறார். ஆனால் அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரவில்லை என்றாலும், மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானம் நிற்கும் இடம், அவர் பயணம் செய்யவுள்ள விமானம் ஆகியவை முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் பழைய விமான நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்புதான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.  உரிய பாஸ் மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை வந்த குடியரசு தலைவரை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஆகியோர் வரவேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்