நிவர் புயலால் பள்ளிகளுக்கு விடுமுறை..!
நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் , காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.
அதன்படி 9, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிவர் புயலால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.