திண்டுக்கலில் 5 அரசுப் பேருந்துகள் கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் …!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுகவினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ,திண்டுக்கலில் 5 அரசுப் பேருந்துகள் கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கேட்டிருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்கட்சியான திமுக முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது.
திமுகவின் இந்த போராட்டாத்திற்கு கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கலில் 5 அரசு பேருந்துகளின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பேருந்துகளின் கண்ணாடி உடைந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சம்மந்தப்பட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.