டேவிட் வார்னர் புதிய யோசனை ..!மேல்முறையீடு செய்ய வாய்ப்பு?
முன்னால் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய போர்டு தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து, மூத்த வீரர்களின் ஆதரவுடன்தான் அவர் இவ்வாறு செய்ததாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக்கொண்டார். அதனால், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஓராண்டும், பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
இது பல தரப்பில் அதிகமான தண்டனையாக பார்க்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில், கண்ணீர் விட்டு கதறி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ஸ்மித். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வாரியத்தின் தண்டனையை குறைக்க மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் முழு பொறுப்பையும் தான் ஏற்பதாகவும், தனக்கு வழங்கியுள்ள தண்டனையை மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் ஸ்மித் தெரிவித்தார். பான்கிராப்டும் மேல்முறையீடு செய்யும் திட்டமில்லை என தெரிவித்தார்.
ஆனால், துணை கேப்டன் டேவிட் வார்னர் தரப்பில் மேல்முறையீடு செய்வது குறித்து இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. 31 வயதான வார்னரின் நெருக்கடியின் பேரில் தான் பந்தை சேதப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டதாக பெரும்பாலும் நம்பப்படுகிறது. மேலும், ஸ்மித்தின் உருக்கமான பத்திரிகையாளர் சந்திப்பு அவரின் மேல் ரசிகர்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஸ்மித்துக்கு ரசிகர்களிடையே கிடைத்த ஆதரவு வார்னருக்கு கிடைக்க வில்லை. அதனால் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.