நம்ம சிஎஸ்கே-க்கு ஓபனிங் யாரு தெரியுமா?யாருன்னு தெரிஞ்சா உண்மையிலே விசில் பறக்கும் …!நீங்களே பாருங்க …..
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இடம் பெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வரிசையில் ஆட தோனிக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,இந்திய கிரிக்கெட் அணியில் தோனி 6 அல்லது 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். இதற்கிடையே 2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி இடம் பெற்றுள்ளது.
தற்போது தொடக்க வரிசையில் தோனியை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் எத்தனையாவது பேட்ஸ்மேனாக இறங்குவார் என்பதை பிளெமிங் தெரிவிக்கவில்லை. மேலும் அணியில் பல்வேறு பன்முகத் திறமை வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மார்க் உட், லுங்கி கிடி, இந்திய வீரர் தாகூர் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்வார்கள். மேலும் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளதும் அணிக்கு வலிமை தந்துள்ளது. அவர் பந்துவீச்சோடு, சிறப்பாக பேட்டிங்கும் மேற்கொள்வார் என்றார் பிளெமிங்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.