டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…!ஆதார் விவகாரத்தில் மத்திய அரசும்,வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு…!
மத்திய அரசுக்கும் வருமான வரித்துறைக்கும் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் எண்ணை வருமான வரி அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என வருமான வரித்துறை விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் முகுல் தல்வார், விருந்தா குரோவர் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர், இது குறித்துப் பதிலளிக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.