பிரம்மாண்ட வசூல் ஈட்டி வரும் சமந்தா படத்திற்கு தடை!
தெலுங்கு ஸ்டார் ராம்சரன் மற்றும் நடிகை சமந்தா கிராமத்து வேடத்தில் நடித்துள்ள ரங்கஸ்தலம் படம் பிரம்மாண்ட வசூல் ஈட்டி வருகிறது. வெளியான மூன்றே நாளில் படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது.
இந்த படத்திற்கு சென்னையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் மட்டும் 1 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது மற்ற தெலுங்கு படங்களின் வாழ்நாள் வசூலை விட மிக அதிகம்.
இந்நிலையில் சென்னையில் வரும் ஞாயிற்றுகிழமைக்கு பிறகு ரங்கஸ்தலம் திரையரங்குகளில் இருந்து திரும்பப்பெறபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக தெலுங்கு தயாரிப்பாளர் இந்த முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வேலைநிறுத்தம் முடியும்வரை எந்த புதிய தெலுங்கு படமும் தமிழ்நாட்டில் வெளியிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.